திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் கலந்துரையாடி மாட்டு வண்டியில் பயணித்தார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசார எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் சென்ற இபிஎஸ், கொல்லுமாங்குடியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து, விவசாயிகளுடன் மாட்டு வண்டியில் பயணித்த எடப்பாடி பழனிசாமி, குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.