கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியுள்ளது.
அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 836 கனஅடியாக உள்ள நிலையில், நீர்இருப்பு 4 ஆயிரத்து 441 மில்லியன் கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.