தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள பாரம்பரிய நுழைவாயிலை இடிக்கக் கூடாது எனக்கூறி அதிமுக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை நகரம் கேரளாவுடன் இருந்தபோது நகரின் நுழைவு பகுதியில் துவாரபாலகர் சிலையுடன் கூடிய நுழைவாயில் கட்டப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு கனரக வாகனங்களால் சேதமடைந்த நுழைவாயிலை இடித்துவிட்டு, வேறு இடத்தில் புதிய நுழைவாயில் கட்ட நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டையில் அதிமுக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாரம்பரிய நுழைவாயிலை இடிக்கக் கூடாது என்றும், நுழைவாயிலைப் புனரமைக்க வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பினர்.