எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடிப் போக மாட்டோம் எனக் காங்கிரசாருக்கு ஜே.பி.நட்டா பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தலையீட்டால் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக 24 முறை கூறியுள்ளார் எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அரசு தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.
ஆனால், இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.