எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!
Oct 22, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது குறிவைத்து ஏவியது. அவற்றில் ஒன்று கூட இந்தியாவின் எல்லைக்குள் நுழையவில்லை. இந்தியாவின் வலிமை மிக்க பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழித்தன.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகளவில் கை கொடுத்துள்ளது. இதனையடுத்து, இந்திய ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த அதிகாரிகளும், விஞ்ஞானிகளும்
மும்முரம் காட்டி வருகின்றனர்.

2018ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புத் துறை, அதன்  செயற்கை நுண்ணறிவு உத்தியை வெளியிட்டது. முன்னதாக, 2017ஆம் ஆண்டு அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுத் திட்டத்தைச் சீனா வெளியிட்டது.

2025ம் ஆண்டுக்குள் AI துறையின் அடிப்படை கோட்பாடுகளைச் சீனாவே வடிவமைக்கும் என்றும், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் முதன்மை AI கண்டுபிடிப்பு மையமாகச் சீனா மாறும் என்றும் அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகச் சீன அரசு 2.7 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி வருகிறது.

இந்தியாவும் பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை மேம்படுத்தி உள்ளது. 2018ஆம் ஆண்டு, தேசியப் பாதுகாப்பில் AI இன் தாக்கங்களை ஆய்வு செய்ய என்.சந்திரசேகரன் பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பாதுகாப்பு AI கவுன்சில் (DAIC) மற்றும் பாதுகாப்பு AI திட்ட நிறுவனம் (DAIPA) ஆகியவை உருவாக்கப்பட்டன.

மேலும், iDEX என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Defence India Startup Challenge, இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு  மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கித் தரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. அதாவது, பாதுகாப்புத் துறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில்,சரியான தீர்வை வழங்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையத்தின் மூலம் DRDO விஞ்ஞானிகளுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற  ‘பாதுகாப்பில் AI’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியின்போது புதிதாக உருவாக்கப்பட்ட 75 செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளை பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும், “பாதுகாப்புத் துறையில் AI மற்றும் பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களைச் சரியாக பயன்படுத்துவது   முக்கியம் எனவும் அப்போது தெரிவித்தார்.

ஏற்கெனவே, இந்தியாவின் இந்திரஜால் தன்னாட்சி ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு, UAV அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பல அடுக்கு ட்ரோன் வான் பாதுகாப்பை வழங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில்  செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. ஆளில்லா வான்வழி வாகனங்களும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடும் இந்திய விமானப் படையை நவீனமயமாக்கி உள்ளன.

கடல்சார் கண்காணிப்பு பணிகளிலும்  AI ஐ பயன்படுத்துகிறது. AI ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் இருந்தாலும், பாதுகாப்பு அமைப்புகளில் அதிநவீன கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து இந்தியாவும் ஆதிக்க செலுத்தத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்பு செயற்கை நுண்ணறிவு துறையில் இணைந்து செயல்படவும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகள் சண்டையிடுகின்றன என்றால், அதில் எந்த நாடு சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதோ அந்த நாடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராகும் நோக்கத்தில் 2025-ம் ஆண்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்  ‘சீர்திருத்த ஆண்டாக’ அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Tags: எதிர்கால போர் AI போர்WAR NEWSIndiaindian armyAI technologyஇந்தியாFuture War AI War: India laying the foundation for victory
ShareTweetSendShare
Previous Post

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Related News

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies