பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, தமிழக வளர்ச்சி என அனைத்திலும் திமுக கோட்டை விட்டதால் 2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாஜக மாநில தலைவரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அகற்றப்பட வேண்டும் என்பதில் தங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதாகக் கூறினார்.
திமுக ஒவ்வொரு நாளும் கீழே தான் போய்க் கொண்டிருக்கிறது எனவும் அவர்களுடைய கூட்டணி பலவீனமடைந்து வருவதாக அறிகுறிகள் தென்படுகின்றன எனவும் விமர்சித்த அண்ணாமலை, தேர்தல் வரலாற்றிலேயே ஒரு மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் என்றும் கூறினார்.