தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுத் தான் போகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுக் கூட்டு மந்திரி சபை தான் அமைக்கும் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று டிடிவி தினகரன் உறுதியாக கூறினார்.
திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர் முற்றிலும் கெட்டுவிட்டது என்று குற்றம்சாட்டியவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைவதைப் பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது என்று டிடிவி தினகரன் கூறினார்.