அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட விசாரணை நடத்திவிட்டு, தற்போது அவர்களது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது திமுக அரசின் ஏவல்துறை.
நாள்தோறும் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு வரும் வேளையில், மதுரை ஆதீனத்தின் மீது கவனத்தைக் குவித்து எதை திசைதிருப்பப் பார்க்கிறது திமுக அரசு? அல்லது, பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி இந்துமத மடாதிபதிகளைத் துன்புறுத்தி, குறிப்பிட்ட சில சமூகத்தவரின் வாக்குகளைக் கவரலாம் என்று திட்டமிடுகிறதா? அல்லது, அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று நினைக்கிறதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
திராவிட மாடலின் குறிக்கோள் எதுவாயினும், அதை தேசியவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்பர் என்னும் உண்மையைத் திமுக அரசு உணர வேண்டும்.
இப்படி தேவையற்ற மனுக்களைப் போட்டு இந்து மதத் தலைவர்களையும் நீதிமன்ற நேரத்தையும் அவமதிக்கும் வழக்கத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும், உடனடியாக மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் காவல்துறை மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.