ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க வெளிநாட்டுப் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர்.
கடந்த 3-ஆம் தேதி பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரட்டை பாதைகளில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது.
இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த 9 பக்தர்கள் அமர்நாத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர்..