திருச்செந்தூர் - சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் - தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!
Aug 24, 2025, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

Web Desk by Web Desk
Jul 27, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் மற்றும் பாலக்காடு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து சென்னை மற்றும் பழனி செல்லும் இரயில்களில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் போதுமான இருக்கைகள் கிடைப்பதில்லை.  இதனால பக்தர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக முன் தமிழ் ஜனம் தொலைக்காட்யில் செய்தி வெளியானது.

இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.17.5 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடந்து வரும் அம்ரித் பாரத் திட்ட பணிகளில் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை மற்றும் குளிர்சாதன காத்திருப்போர் அறைகளில் சில மாற்றங்கள் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் அனைத்தும் அக்டோபர் 15-ந் தேதிக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

திருச்செந்தூர் முதல் நெல்லை வரை இரயில் நடைபாதை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அப்பணிகள் நிறைவேற்றவுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றார்.

அதே போல் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட அனைத்து ரெயில்களுக்கும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை இயக்குவதற்கான திட்டம் தற்போதுவரை இல்லை என தெரிவித்த அவர் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அம்ரித் பாரத் பணிகள் நிறைவுபெற்றதும் கூடுதல் இரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags: Tiruchendur railway stationAmrit Bharat schemeSouthern Railway General Manager R.N. SinghTiruchendur to Chennai trainsadditional coaches
ShareTweetSendShare
Previous Post

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Next Post

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies