கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் மற்றும் கராத்தே செய்து அசத்திய தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
ஆதிதமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் ஸ்ரீ சுக பிரம்மா மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சார்பில் பீடம்பள்ளி பகுதியில் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து 5 மணி நேரம் 15 நிமிடங்கள் கராத்தே செய்தும், சிலம்பத்தைச் சுற்றியும் சாதனை படைத்தனர்.
தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சிலம்ப சாதனை நிகழ்வை நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழை வழங்கியது.
இது தொடர்பாகப் பேசிய மாணவர்கள் இந்த சாதனை முயற்சி புதிய உத்வேகத்தை அளிப்பதாகவும், எங்களை மேம்படுத்திய பயிற்றுநருக்கு நன்றி எனவும் தெரிவித்தனர்.