தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கோயிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
ஹைதராபாத்தில் உள்ள லால் தர்வாசா சிம்மவாஹினி மகாகாளி கோயிலில் போனலு என்ற சடங்கை பி.வி.சிந்து மேற்கொண்டார்.
இதையொட்டி அரிசி, பால் மற்றும் வெல்லம் நிரப்பி அலங்கரிக்கப்பட்ட பானைகளை பி.வி.சிந்து தலையில் சுமந்து வந்து மகா காளிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.