திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது காரைக்குடியில் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணி பலம்வாய்ந்த கூட்டணி; இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என தெரிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி மக்களுக்காக பாடுபடும் எனறும், திமுக ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் குற்றமசாட்டினார்.
திமுக பொறுப்புக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்குத்தான் என்றும், காரைக்குடியில் நகராட்சி நிலங்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு குறைந்த விலைக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகவும் சாடினார்
வரிமேல் வரிபோட்டு மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது திமுக அரசு என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
==
உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகளை மதுரை ஆதீனம் மடத்திற்கு சென்று சந்தித்து அவரது உடல்நலன் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து அவரிடம் ஆசி பெற்று வந்தேன்.