தமிழக அரசு 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளரான பணீந்திர ரெட்டி வியாழக் கிழமையுடன் ஓய்வு பெறுவதால், அந்தப் பதவிக்கு சுன்சோங்கம் ஜடக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல நிதித்துறை சிறப்புச் செயலாளராக இருந்து வந்த பிரசாந்த் மு வடநெரே நிதித்துறை செயலாளராகவும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக இருந்து வந்த ராஜ கோபால் நிதித்துறை இணைச் செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக இருந்து வந்த தீபக் ஜேக்கப், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராகவும், அருங்காட்சியகங்கள் இயக்குநராக இருந்து வந்த கவிதா ராமு, கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.