திமுக ஆட்சியில் கோயில்கள் கூட அரசியல் கொள்ளையிலிருந்து தப்பவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூரில் உள்ள சுந்தரமூர்த்தி அய்யனார் கோயிலில் திமுக நிர்வாகி துணைவேந்தன் என்பவர் தன்னிச்சையாக உண்டியலை நிறுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த உண்டியலுக்குச் சீல் வைக்க நடவடிக்கை எடுத்தபோது திமுக நிர்வாகி துணைவேந்தன், அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறியுள்ள அவர், உண்டியலையும், அதில் செலுத்தப்பட்ட பக்தர்களின் காணிக்கையையும் துணைவேந்தன் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயல்களை பாஜக சுட்டிக்காட்டுவது முதல்முறை அல்ல எனக் கூறியுள்ள அண்ணாமலை, திமுக நிர்வாகி துணைவேந்தன், தனது ஆதரவாளர்களுடன் உண்டியலை எடுத்துச் சென்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.