F-35-ஐந்தாவது தலைமுறை அமெரிக்க ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா மீது 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். அமெரிக்காவின் F-35- போர் விமானத்தை விடவும், உள்நாட்டிலேயே தயாரிக்கும் இந்தியாவின் தேஜஸ் Mk2 போர் விமானம் எந்த வகையில் சிறந்தது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
2027ம் ஆண்டுக்குள் விமானப்படையை மேம்படுத்துவதற்காக, இந்தியா தயாரித்த தேஜஸ் Mk2 அடுத்த தலைமுறை போர் விமானமாகும். அமெரிக்காவின் F-35 மேம்பட்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் என்றாலும், தேஜஸ் Mk2 கொண்டுள்ள புதிய தொழில்நுட்பம் F-35 போர் விமானத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.
43,000 பவுண்டு த்ரஸ்ட் இன்ஜின் F-35 போர் விமானத்தில் பயன்படுத்துகிறது. ஆனால், அதைவிட அதிக சக்திவாய்ந்த GE F414 இன்ஜின் தேஜஸ் MK 2 போர் விமானத்தில் பயன்படுத்தப் படுகிறது.
F-35 போர் விமானத்தின் வேகம் அதிக பட்சம் mach 1.6 ஆகும். இது மணிக்கு சுமார் 1,960 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியதாகும். தேஜஸ் Mk2 பயன்படுத்தும் இன்ஜின், 98 கிலோநியூட்டன் உந்துவிசையை அளிப்பதால் இதன் வேகம் மற்றும் மேக் 1.8 ஆகும். அதாவது,தேஜஸ் MK 2 போர் விமானம் மணிக்கு சுமார் 2,205 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியதாகும். வேகத்திலும் தேஜாஸ் Mk2 போர் விமானமே முன்னணியில் உள்ளது.
F-35 என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். இது 0.005 மீ சதுரம் வரை குறைந்த ரேடார் குறுக்குவெட்டுடன் அமைக்கப் பட்டுள்ளது. இதனால்,இந்த போர் விமானம், ரேடாரின் கண்ணுக்குத் தெரியாமல் எதிரி எல்லைக்குள் சென்று தாக்கும் உள்ளதாகும்.
தேஜஸ் Mk2-க்கு சுறுசுறுப்பும் மற்றும் பிற ரேடார் கண்ணுக்குத் தப்பிக்கும் திறனும் அசாதாரணமாக உள்ளது. இதற்காக, இந்த விமானத்தில் canard இறக்கைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. F-35 போர் விமானத்தில் உள்ள ஒருங்கிணைந்த Active Electronically Scanned Array ரேடார், 360-டிகிரி கேமரா அமைப்பு மற்றும் தரவுகளின் இணைவு, ஒரு மேம்பட்ட சூழ்நிலை விழிப்புணர்வை அளிக்கிறது. மேலும், விமானிகளுக்கு எதிரி இருப்பிடங்களை நிகழ் நேரத்தில் வழங்குகிறது.
இந்தியாவின் தேஜஸ் Mk2 போர் விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்தம் Active Electronically Scanned Array ரேடார், infrared search and track அமைப்பு மற்றும் smart cockpit design ஆகியவை அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை விடவும் மிகத் துல்லியமாகப் பல இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க உதவுகின்றன.
இதனாலேயே, உலகளாவிய அடுத்த தலைமுறை போர் விமானங்களில் தேஜஸ் Mk2 மிகவும் மேம்பட்ட போர் விமானமாகப் பாராட்டப்படுகிறது. F-35 உள் மற்றும் வெளிப்புற ஆயுதங்கள் உட்பட சுமார் 8,160 கிலோ வரை ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது. அதே நேரத்தில் தேஜஸ் Mk2 போர்விமானம் சுமார் 6,500 கிலோ வரை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது.
F-35 அதிகபட்சமாக சுமார் 1,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும். ஆயுதங்கள் ஏதுமில்லாமல் சுமார் 2,200 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும். ஆனால் தேஜஸ் MK 2 சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும்.
மேலும், நடு-வானிலேயே எரிபொருள் நிரப்பும் வகையில் தேஜஸ் வடிவமைக்கப் பட்டிருப்பதால், நீண்ட தூர ரோந்து மற்றும் ஆழமான தாக்குதல்களுக்கு ஏற்ற பல்துறை திறன் கொண்டதாகவும் தேஜாஸ் MK 2 போர் விமானம் விளங்குகிறது. ஒரு F-35 போர் விமானத்தின் விலை 82.5 மில்லியன் அமெரிக்க டாலராகும். F-35B போர் விமானத்தின் விலை 109 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உள்நாட்டிலேயே தயாரிக்கும் தேஜஸ் MK 2 போர் விமானத்தின் விலை 60 மில்லியன் அமெரிக்க டாலராகும். மேம்பட்ட திறன், அதிக வேகம் என்பதை எல்லாம் தாண்டி,விலையும் குறைவு என்ற அளவில்,தேஜஸ் MK -2 போர் விமானம் இருக்க, அமெரிக்காவிடம் அதிக விலை கொடுத்து F -35 விமானங்களை வாங்குவதில்லை என்று இந்தியா முடிவெடுத்துள்ளது.
TEJAS MK-2 திட்டம் சீராக முன்னேறி வரும் நிலையில், முன்மாதிரியின் வெளியீடு மற்றும் தரை சோதனை இந்த ஆண்டு இறுதியில் வெற்றிகரமாக நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு, TEJAS MK-2 முதல் போர்விமானம், விமானப்படையில் சேர்க்கப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது.
இந்தியாவின் தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வலிமையை வெளிக்காட்டும் TEJAS MK-2, ரஷ்ய, மேற்கத்திய மற்றும் அமெரிக்க அடுத்த தலைமுறை போர் விமானங்களுக்கு வலிமையான போட்டியாளராக மாற உள்ளது.