தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.