உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ், ஜலான், அவுரியா, ஹமிர்பூர், ஆக்ரா, மிர்சாபூர், வாரணாசி, கான்பூர் தேஹாத், பல்லியா, பண்டா, எட்டாவா, ஃபதேபூர், கான்பூர் நகர் மற்றும் சித்ரகூட் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வாரணாசியில் கங்கை ஆற்றில் வெள்ள நீர் அபாய அளவை தாண்டி செல்வதால் தாழ்வான இடங்களில் உள்ள பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதேபோல் பிரயாக்ராஜ் பகுதியில் சசூர் காதேரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.