இந்திய அணி அடுத்ததாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் செப்டம்பர் 10-ம் தேதி துபாயில் சந்திக்கிறது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் செப்டம்பர் 14-ம் தேதி துபாயிலும், ஓமனைச் செப்டம்பர் 19-ம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது.
இதனால் இந்திய அணிக்கு ஏறக்குறைய அடுத்த ஒரு மாத காலம் எந்த போட்டிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.