தேசப் பிரிவினையால் இந்துக்களே அதிகம் பாதிக்கப் பட்டனர். பஞ்சாப், சிந்து போன்ற மாகாணங்களில், முஸ்லீம்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு இந்துக்கள் வாழவேண்டும் என்பது தான் காந்தியின் விருப்பமாக இருந்தது. உண்மையில், காங்கிரசுக்கு இந்துக்கள் பற்றிய அக்கறை இல்லை. எனவே, இந்துக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். எடுத்தது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சிந்து மாகாணத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஷாகாவில் கலந்து கொண்ட ஸ்ரீ குருஜி, அம்மாகாணத்தில் உள்ள இந்துக்களைப் பாதுகாப்பாக எப்படி இந்தியாவுக்கு அழைத்து வருவது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். நீண்ட நேரம் நடைபெற்ற தீர்க்கமான ஆலோசனைக்குப் பின் ஸ்ரீ குருஜி இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
ராட்டை இல்லாமல் அசோக சக்கரம் உள்ள கொடியை வணங்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தார் காந்தி. அதே நேரம், மாஸ்கோவுக்கான முதல் இந்திய தூதராக மாஸ்கோ சென்றடைந்தார் நேருவின் சகோதரியான விஜயலக்ஷ்மி பண்டிட். வெளிநாட்டில் முதல்முதலாக, விமான நிலையத்தில் அசோக சக்கரம் வரையப் பெற்ற தேசியக் கொடி பறந்தது.
டெல்லியில் நேரு வங்காளத்துக்கான ஆளுநராக ராஜாஜியை நியமித்தார். வங்காளத்தைப் பிரிப்பதற்கு ஆதரவு காட்டிய ராஜாஜியை ஆளுநராக நியமித்தது வங்காளத்துக்கு அவமானம் என்று நேதாஜியின் சகோதரர் சரத் சந்திர போஸ் விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையே, ராமதீர்த்தர் தலைமையில் ஒன்று கூடிய ஹைதராபாத் காங்கிரஸ் தலைவர் சுவாமி, கையில் தேசிய கொடியுடன் இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று நிஜாமுக்குக் கோரிக்கை வைத்தார்.
இந்தியா விடுதலைக்குப் பின்னும் சுமார் இரண்டாண்டுக் காலத்துக்கு ரஜாக்கர்களின் கொடுமையை அம்மக்கள் அனுபவித்து வந்தனர் என்பது வரலாறு. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், தனது குடும்பத்தினருடன் ஜின்னா கராச்சிக்குப் புறப்பட்டார். கராச்சி வந்திறங்கிய ஜின்னாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் மிகக் சிலரே இருந்தனர். இது ஜின்னாவுக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது.
பாகிஸ்தானுக்கான முதல் இந்தியத் தூதராக ஸ்ரீ பிரகாசா என்பவரை நேரு நியமித்தார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குப் புலம் பெயரும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு ஸ்ரீ பிரகாசாவுக்கு இருந்தது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ,பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஜின்னா உரையாற்ற வேண்டியிருப்பதால், ஸ்ரீ பிரகாசா உடனடியாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கராச்சிக்குச் சென்றிருந்த ஆச்சார்யா கிருபளானியின் மனைவி சுசேதா கிருபளானியிடம், அங்கிருந்த இந்துப் பெணகள், முஸ்லீம்கள் தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், அதனால் ஒவ்வொரு நாளும்,அச்சத்துடனே வாழ வேண்டியுள்ளது என முறையிட்டனர். அதற்கு சுசேதா கிருபளானி, அதிர்ச்சிதரும் வகையில் பதில் அளித்தார்.
தான் தெருவில் சுதந்திரமாக நடந்து செல்வதாகவும்,எந்த முஸ்லீமும் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்ற கூறிய சுசேதா கிருபளானி அதற்கான காரணங்களையும் விவரித்தார். தான், உங்களைப் போல் முகத்துக்குக் கவர்ச்சியாக ஒப்பனை செய்யவில்லை என்றும், உங்களைப் போல் உடல் தெரியும் அளவுக்குச் சேலை அணியவில்லை என்றும் கூறி, அங்கிருந்தவர்களை அவமானப் படுத்தினார்.
மேலும், ஒரு வேலை முஸ்லீம்கள் உங்களை வன்புணர்வு செய்தால், உடனடியாக, ராஜ்புத் பெண்களைப் போலத் தீக்குளித்து இறந்து விடுங்கள் என்றும் ஆச்சாரியா கிருபளானியின் மனைவி ஆலோசனை வழங்கினார். பல காங்கிரஸ் தலைவர்களின் மனநிலை இப்படித் தான் இருந்தது. இந்துக்கள் மீதான எந்த அக்கறையும் அவர்களிடம் இல்லை.
அதேநாள் இரவில், அமிர்தசரஸிலிருந்து பாட்னாவுக்கு இரயில் மூலம் காந்தி பயணம் மேற்கொண்டார். வழியில் உள்ள இரயில் நிலையங்களில் திரண்டிருந்த மக்கள், மத வன்முறைகள் எப்போது நிற்கும் என்று காந்தியிடம் கேட்டனர். மக்களின் கேள்விக்குத் திருப்திகரமான பதிலைக் காந்தியால் சொல்ல முடியவில்லை.
அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இந்துக்களை எங்கே குடியமர்த்துவது, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்பது குறித்த எந்த திட்டமும் காங்கிரஸிடம் இல்லை.
















