மக்களை காக்கக்கூடிய காவல்துறையினரையே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் சட்ட – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை நிரூபிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தென்காசி மாவட்டம்ம கடையநல்லூரில் பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாக தெரிவித்தார்.
காவல்துறையை சேர்ந்தவரே படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீர்குலைவை காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத அரசாக திமுக அரசாங்கம் உள்ளதாகவும், திறமை இல்லாத முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து வருவதாகவும் அவர் சாடினார்.