மதுரை செல்லூர் பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு செல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்தனர்.
தனியார் மண்டபத்திற்குச் செல்ல ஒரே நுழைவாயில் மட்டுமே இருந்ததால் பெண்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றதாகவும், கூட்டத்திற்குள் செல்ல முடியாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மண்டபத்தின் வெளியே வெயிலில் காத்துக் கொண்டிருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முகாமிற்கு வந்த பெண்கள் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான சேவைகளை பணியாளர்கள் வழங்காமல் அலைக்கழித்ததாகவும் கூறினர்.
மேலும், தனியார் மண்டபத்தின் 2வது மாடிக்குச் செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளானதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.