ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி சீனாவிற்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
அதேபோல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவிற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் சீனாவில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விவகாரத்தில் மிரட்டல் விடுத்து வரும் வேளையில் பிரதமர் மோடியின் பயணம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.