கடந்த 1993ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் உயிர்நீத்த 11 பேரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம், கடந்த 1993ம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 32ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது.
அப்போது, உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ணகோபால், அகில பாரத குடும்ப பிரபோதன் ப்ரமுக் ரவீந்திர ஜோசி, தென் பாரத ஊடகப் பொறுப்பாளர் ஸ்ரீ ராம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த தென் பாரத ஊடகப் பொறுப்பாளர் ஸ்ரீ ராம்ஜி, மக்களின் நலனுக்காக என்றும் ஆர்எஸ்எஸ் இருக்கும் எனத் தெரிவித்தார்.