டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிதாம்புரா மெட்ரோ நிலையம் அருகே உள்ள உணவகத்திற்குத் தனது கணவருடன் பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் சுடிதார் அணிந்திருந்ததால் உணவக ஊழியர்கள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இருப்பினும் மேற்கத்திய ஆடைகள் அணிந்து வந்த பெண்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர். இது குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் உணவக நிர்வாகத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவும் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த உணவக உரிமையாளர் இந்த சம்பவத்திற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து உணவக வாசலில் அனைத்து பாரம்பரிய உடைகளுக்கும் அனுமதி உண்டு என்றும் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.