ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸில் உரையாற்றிய அவர், ஏப்ரல் 22-ம் தேதியன்று பஹல்காமில் நடந்தது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும், மறுநாளே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
என்ன செய்ய வேண்டும் என்பதை தாங்களே முடிவு செய்யும் சுதந்திரம் தங்களுக்கு வழங்கப்பட்டதாக கூறிய அவர், இம்மாதிரியான நம்பிக்கை, அரசியல் தெளிவை முதன் முறையாக கண்டதாக தெரிவித்தார்.
இதனை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சதுரங்க ஆட்டம் போல் ராணுவம் செயல்பட்டதாகவும் தலைமை தளபதி உபேந்திர திவேதி குறிப்பிட்டார்.