பாகிஸ்தானின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட சுட்டு வீழ்த்தப்படவோ அல்லது தாக்கப்படவோ இல்லை எனக் கூறியுள்ளார். உண்மை தெரிய வேண்டும் எனில் இருதரப்பில் இருந்தும் விமானப்படை தளவாடங்களை சுதந்திரமாக ஆய்வு செய்ய அனுமதிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.