மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் மூலம் சுமார் 20 லட்சம் முதியவர்களும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்னணு எடைத்தராசு உள்ளிட்ட உபகரணங்களுடன் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.