உக்ரைன் மக்களுக்கு ஆதரவான வார்த்தைகளைப் பேசியதற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன் எனத் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடியாக சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து செப்டம்பரில் ஐ.நா. பொது கூட்டத்திற்கான சந்திப்பின்போது, தனிப்பட்ட முறையில் இருவரும் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்து இருக்கிறோம் எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.