பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!
Nov 4, 2026, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசாவை இஸ்ரேல் முழுமையாக ஆக்கிரமிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலால் ஏற்பட்ட போர்,  தற்போது 22 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வந்தாலும்,  இதுவரை ஒரு சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

காசாவின் 80 சதவீத பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் எஞ்சிய 20 சதவீத பகுதியையும் ஆக்கிரமிக்க முயல்வதாகத் தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் அதிபர், ஹமாஸ் அமைப்பினர் மட்டும் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால், நாளையே போரை நிறுத்தி விடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

காசாவை கைப்பற்றுவது நோக்கமல்ல என கூறியுள்ள நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து காசாவை விடுவிப்பதே தங்கள் இலக்கு என விளக்கம் அளித்துள்ளார். மேலும், காசாவில் நிலவும் உணவு தட்டுப்பாடு நீடித்தால் 2 ஆண்டுகளில் அங்கு யாருமே இருக்க மாட்டார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

இருப்பினும் இஸ்ரேலின் இந்த விளக்கங்களை பல்வேறு நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அதனைத் தனி நாடாக அங்கீகரிப்பது குறித்தும் பல நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

தனி நாடு அஸ்தஸ்து கோரி பல ஆண்டுகளாகப் பாலஸ்தீனம் போராடி வருகிறது. ஆனால், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் போருக்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியுள்ளது.  கடந்தாண்டு, அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன. அண்மையில் பிரான்சும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்தது. தற்போது ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

இது குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், அடுத்த மாதம் ஐநா பொதுச்சபையில் நடைபெறவுள்ள 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நடைபெறும் போரையும், காசாவில் நிலவும் பசி, பட்டினி உள்ளிட்டவற்றையும் முடிவுக்குக் கொண்டுவர, பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிப்பதே சிறந்த முடிவு என விளக்கம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அடுத்த மாதம், பிரான்ஸ், மால்டா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கவுள்ளன. இதன்மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு இஸ்ரேல் தள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

Tags: இஸ்ரேல்காசாCountries of the world that recognize Palestineபாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் செப்டம்பரில் நேரில் சந்திப்பு : ஜெலன்ஸ்கி தகவல்!

Next Post

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Related News

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies