தென்காசியில் கரும்புச்சாறு இயந்திரத்தைச் சுத்தப்படுத்தும்போது தவறுதலாகச் சிக்கிக்கொண்ட பெண்ணின் கையை, தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜிஜு – மினி தம்பதியர் கரும்புச்சாறு இயந்திரத்தை வைத்து தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயந்திரத்தை மினி கழுவிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக, இடது கை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதில், அவர் வலி தாங்காமல் துடித்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கரும்பு இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட கையை எடுக்க முயன்றும் முடியாததால், இயந்திரத்தை வெட்டினர்.
இதனைத் தொடர்ந்து, சிதைந்த கையோடு பெண் மீட்கப்பட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.