பாரத சுதந்திரத்துக்கு முதல்நாள், ஆட்சி அதிகார மாற்றத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சுதந்திரக் கொண்டாட்ட உற்சாகத்தில் மக்கள் திளைத்திருந்தாலும், கொல்கத்தாவில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் நின்றபாடில்லை. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி அதிகாலை, பேலியாகாட் பகுதியில் நடைப் பயிற்சி செய்யக் காந்தி வெளியில் வந்தார். குளிர்ந்த காற்றில் ரத்த வாடை நிறைந்திருந்தது. வழியெங்கும் எரிந்து சாம்பலான வீடுகள். நொறுங்கிய குடியிருப்புகள்.
காந்தியுடன் வந்த அவரது உதவியாளர்கள், இவை முஸ்லீம் பயங்கரவாதிகளால் எரித்து தரைமட்டமான இந்துக்களின் வீடுகள் என்று விளக்கினார்கள். பதிலேதும் சொல்லமுடியாமல் காந்தி தவித்தார்.
காலை 9 மணிக்கு கராச்சியின் சட்டமன்ற வளாகத்தில், மவுண்ட் பேட்டன் ,ஜின்னா,உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கூடியிருந்தனர். பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக ஜின்னா பதவியேற்றார். இது தவிர, பாகிஸ்தானில் யாரும் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடியதாக தகவல்கள் இல்லை. ஒருசில இடங்களில் மட்டுமே பாகிஸ்தான் தேசிய கொடி பறக்கவிடப் பட்டிருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் எங்குமே பாகிஸ்தான் தேசிய கொடி பிறக்கவில்லை. எந்தவித கொண்டாடட்டமுமில்லை.
அடிமை இந்தியாவின் கடைசி மாலை நேரப் பிரார்த்தனைக்குப் பின் காந்தி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். மதவாத வன்முறைகள் தலைவிரித்து ஆடுமேயானால், பெற்ற சுதந்திரம் நீண்ட நாள் நீடிக்காது என்று கூறிய காந்தி, தொண்டர்களை விரதம் இருக்குமாறும், பிரார்த்தனை செய்யுமாறும், சுதேசி நூல் நோற்குமாறும் வலியுறுத்தினார்.
டெல்லியில் விடாது மழை பெய்து கொண்டிருந்தது. மாலை 6 மணிக்கு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் இல்லத்தில், நேருவைத் தவிர அமைச்சரவையில் பங்கேற்கும் அனைவரும் கூடியிருந்தனர். பாரதத்தின் வளமான எதிர்காலத்துக்காக, சம்ஸ்கிருத வேத மந்திரங்கள் ஒலிக்க, மாபெரும் யாகம் நடந்தது. அதன்பிறகு, மாநிலங்களவை கட்டிடத்தில் நடக்க இருக்கும் ஆட்சி அதிகார மாற்ற வரலாற்று நிகழ்வுக்கு அனைவரும் சென்றனர்.
சர்தார் வல்லபாய் படேல்,ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் ஒவ்வொருவராக வந்தவண்ணம் இருந்தனர். கடும் மழையையும் பொருட்படுத்தாது, கூடியிருந்த மக்கள் தலைவர்கள் வரும் போது, வந்தே மாதரம் என்று கோஷமிட்டு விண்ணை அதிர வைத்தனர்.
அவைத் தலைவர் இருக்கையில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருந்தார். அவருக்கு இடப்புறத்தில் மவுண்ட்பேட்டன் இருந்தார். ரோஜா பதித்த நேர்த்தியான உடையில் நேரு அமர்ந்திருந்தார்.
அனைத்து சுதந்திர வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்,காந்தியை குறு என்று போற்றிய ராஜேந்திர பிரசாத். உரைக்குப் பின், பலநாட்கள் கண்விழித்துத் தயாரித்த உரையை நேரு பேசினார். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு, அரங்கத்திலிருந்த பணியாளர் ஒருவர்,
மங்கல சங்கு ஊதி, சுதந்திர பரவசத்தை ஏற்படுத்தினார். சுதந்திர இந்தியா பிறந்தது.
பின்னிரவிலும் கனமழை விடாது பெய்து கொண்டிருந்தது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்திலிருந்து ஏராளமானோர் அகதிகளாக டெல்லிக்கு வந்து கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களில் வெடிகுண்டு வீசி வன்முறை தாக்குதல் நடத்த இஸ்லாமியர்கள் திட்டம் வகுத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.
முஸ்லீம் வன்முறைகளை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது பற்றி, ஸ்வயம் சேவகர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் அரசு பொது நிகழ்ச்சி கல்கத்தா கவர்னர் மாளிகையில் நடந்தது. மேற்கு வங்க ஆளுநராக ராஜாஜி பதவி ஏற்றுக் கொண்டார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், எதிர்பாராத விதமாக , கவர்னர் மாளிகைக்குள் ஓடிய மக்கள், அங்கிருந்த விலையுயர்ந்த காட்சிப் பொருட்கள் மற்றும் சாமான்கள் சூறையாடப் பட்டன. சூறையாடிக் கொண்டு, காந்திஜிக்கு ஜே என்று கோஷமிட்ட படியே மாளிகையை விட்டு வெளியே ஓடிச் சென்றனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் அரசு பொது நிகழ்ச்சி.இப்படி ஒரு கலவரத்தில் தான் முடிந்தது என்பது வரலாறு.