பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டதில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆரணி, வந்தவாசி மற்றும் செய்யார் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து தனியார் நட்சத்திர விடுதியில் விவசாயிகள் மற்றும் வணிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அவர், தொழில் செய்வதற்கும், தொழில் செய்பவர்களுக்கும் அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியின்போது வேளாண் மற்றும் கைத்தறி தொழிலைக் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறிய இபிஎஸ், பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.