ஆந்திர மாநிலம் தர்மவரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
சத்யசாய் மாவட்டத்தில் உள்ள தர்மவரம் நகரில் வசித்து வந்தவர் நூர் முகமது. இவருக்குப் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அவரை கண்காணித்து வந்த அதிகாரிகள், அவரது இல்லத்தில் சோதனையிட்டனர். அப்போது பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.