சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பவர் என்றும், அப்துல்கலாமிற்கு ஆதரவு தராமல் திமுக போன்ற கட்சிகள் பெரும் குற்றத்தை செய்து விட்டன என்றும் அவர் சாடினார்.
விதண்டாவாதம் பேசாமல், தமிழக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவு அளிப்பது தமிழக மக்களுக்கு திமுக செய்யக்கூடிய கடமை என்றும் தமிழிசை தெரிவித்தார்.