திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் பயன்பாடற்ற இடங்களில் ஆங்காங்கே கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில் குடியிருப்புக்கு அருகே குப்பைகளைக் கொட்டுவதற்காக மாநகராட்சி லாரிகள் வந்தன.
அப்போது எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், குப்பைகளை இங்குக் கொட்டுவதால் பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிவித்ததோடு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் நீடித்தது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டது.