முன்னாள் பிரதமர் நேரு, நாட்டை இரண்டு முறை பிரித்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இதில் பேசிய அவர், ராட்கிளிஃப் கோடு பிரிக்கப்பட்டபோது ஒருமுறையும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலம் ஒருமுறையும் நேரு நாட்டை பிரித்ததாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை நேருவே பின்னாளில் ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.