3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில் உரையவர்,
3 ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை என்றும் போதைப்பொருள் பயன்பாட்டை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
திமுக அரசால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று குற்றம் சாட்டியவர், திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது என்றும் அதிமுக, பாஜக ஆட்சியில் மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.