சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு - உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
Oct 17, 2026, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 01:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஜாபர்கான்பேட்டை அருகே பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜாபர்கான் பேட்டை VSM கார்டன் தெருவில் வசித்து வந்த கருணாகரன் என்பவர் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இவர் குடியிருந்த தெருவில் 5க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், கடைசியாக உள்ள வீட்டில் கருணாகரன் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

தெருவில் உள்ள 2வது வீட்டில் பூங்கொடி என்பவர் பிட்புல் ரக நாயை வளர்த்து வரும் நிலையில், பூங்கொடி வீட்டைக் கடந்து சென்றபோது கருணாகரனை பிட்புல் ரக நாய் கடித்துக் குதறியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் கருணாகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற நாயின் உரிமையாளர் பூங்கொடியையும் நாய் கடித்துள்ளது.

இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் கருணாகரனின் சடலத்தைக் கைப்பற்றி கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் பிட்புல் ரக நாயை வலையை வைத்துப் பிடித்தனர். விதிகளை மீறி பிட்புல் ரக நாயை உரிமையாளர் வளர்த்து வந்ததாகவும், புகார் அளித்தும் உரிமையாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, சட்டவிரோதமாக பிட்புல் ரக நாயை வளர்த்து வந்த உரிமையாளர் பூங்கொடி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து ஏற்படுத்துதல்,  அஜாக்கிரதையாக நாய் வளர்த்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Chennai: Chef dies on the spot after being bitten by a pitbull - owner booked under 2 sectionsபிட்புல் ரக நாய்சமையல் கலைஞர் உயிரிழப்பு
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

Next Post

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies