கேரளாவில் பிறந்தநாள் கொண்டாடிய பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
துபாயில் எமிரேட்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் சைனாப் ரோஷ்னா என்பவர், பிறந்தநாள் கொண்டாடும் தனது பாட்டிக்குப் பரிசளிக்க நினைத்தார்.
எனவே சர்ப்ரைஸ் ஏற்பாடுகளை செய்த ரோஷ்னா, பிறந்தநாளுக்கு முந்தைய தினம் துபாயில் இருந்து புறப்பட்டு கேரளா வந்தடைந்தார்.
நீண்ட நாட்களாக பேத்தியைக் காணாத ஏக்கத்தில் இருந்த பாட்டி, தனது பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் விசிட் கொடுத்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார்.
பின்னர் பிறந்தநாள் பரிசாகத் தங்க வளையலைப் பேத்தி அணிவிக்க, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார் கேரள மூதாட்டி.