பாஜகவுக்கு எதிரி என்று யாருமே கிடையாது என தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருநெல்வேலியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக இபிஎஸ் அவர்களை தேர்வு செய்துள்ளதாகவும், இபிஎஸ் தலைமையில் என்டிஏ ஆட்சி அமைக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறினார்.
பாஜக தங்களுக்கு எதிரி என விஜய் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தங்களை பொறுத்தவரை யாரும் எதிரி கிடையாது என்றும் தெளிவுபடுத்தினார்.