சென்னையில் தென்மேற்கு பருவமழை 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை 319.9 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட 17 சதவீதம் அதிகமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வரை தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை 201.6 மில்லி மீட்டர் பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.