இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தருக்கு எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், SRM பல்கலைக் கழகத்தின் வேந்தருமான அண்ணன் பாரிவேந்தர்அவர்களுக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். SRM கல்வி நிறுவனம் மூலம் ஏராளமான கல்விச் சேவைகளையும், சமுதாயச் சேவைகளையும் மேற்கொண்டு வரும் தாங்கள், நல்ல உடல் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவரும், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரி வேந்தர்
அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி துறைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சிறந்த பண்பாளரான ஐயா பாரிவேந்தர் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுள் பெற்று, இன்னும் பல ஆண்டுகள் சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் தொண்டும் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவத்துள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான அண்ணன் திரு. பாரிவேந்தர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடன் கல்விசேவையோடும், மக்கள் சேவையையும் ஆற்றிட எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக் கொள்கிறேன் எனதெரிவித்துள்ளார்.