ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஸ்பிதி பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
‘சூர்யா ட்ரோனதான் 2025’ என்ற தலைப்பில் இந்திய ராணுவமும், ட்ரோன் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவும் இணைந்து ஒரு முன்னோடி ட்ரோன் போட்டியை நடத்துகின்றன.
இது இந்தியாவில் உள்ள ட்ரோன் ஸ்டார்ட்அப்கள், மற்றும் திறமையான ட்ரோன் விமானிகளை, ராணுவத்தின் சவாலான நிலப்பரப்புகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அழைக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.
இதன் முன்னோட்டமாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஸ்பிதி பள்ளத்தாக்கில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து கரடு, முரடான பாதைகளில் நடந்த இந்தப் போட்டி ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. பின்னர்ப் போட்டியில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.