விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் விநாயகர்ச் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், மகாராஷ்டிராவில் விநாயகர்ச் சதுர்த்தி விழா, மாநில விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
விநாயகர்ச் சதுர்த்தி கொண்டாட்டத்திற்குப் பஞ்சமில்லாத மும்பை மாநகரில் மிகவும் பிரபலமான லால் பாக்சா ராஜா விநாயகர்ச் சிலைக்குச் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய விநாயகர்ச் சிலைக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், மும்பையில் உள்ள சித்தி விநாயகர்க் கோயிலில் அதிகாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகரைப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
நாக்பூரில் உள்ள ஸ்ரீ கணேஷ் மந்திர்க் கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
குஜராத் மாநிலம் அகமாதாபாத் அருகே வஸ்த்ரபூர்ப் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், விநாயகர்ப் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்தினர்.