சென்னைத் தரமணியில் தொடர்ந்து குடிநீருடன் கழிவுநீர்க் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.
வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரமணி திருவள்ளுவர் நகர், கம்பர் நகர், பாரதியார்த் தெரு, புத்தர்த் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதிகளில் குடிநீர்க் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், குடிநீருடன் கழிவுநீர்க் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கழிவுநீர்க் கலந்த குடிநீரைப் பயன்படுத்தியதால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்லதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பலமுறைப் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.