நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓரூர்க் காயம் காரணமாகச் சில மாதங்களுக்குக் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஓரூர்க்கிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
மிகவும் கடுமையான காயங்கள் இல்லை எனும் போதும் அவர் 3 மாதங்கள் வரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அவர்ப் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.