புதுச்சேரியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளரை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் முதலியார்பேட்டைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீர், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கழிவு நீர் கலந்து பழுப்பு நிறத்தில் வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளிடம் பலமுறைப் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த மக்கள், மாசடைந்த அந்தத் தண்ணீரை கையில் ஏந்திக் கொண்டு, பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் வீரசெல்வத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.