புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான சதத்தினைப் பதிவு செய்துள்ளார்.
சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் காயம் காரணமாக 80 சதவீதப் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.
தற்போது குணமாகிய அவர்ப் புச்சிபாபு தொடரில் விளையாடி வருகிறார். இத்தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் 122 பந்துகளில் சதமடித்துள்ளார்.
இந்திய அணியில் நீண்ட நாட்களாக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.