ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது தீவிரவாதிகளை அழித்த ராணுவ வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் பாராட்டு தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஆப்ரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
இதில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் தீவிரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்ட ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரை நேரில் அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.
அப்போது அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தும், நடராஜர் மற்றும் மயில் சிலைகளை நினைவுப் பரிசாக வழங்கியும் கெளரவித்தார். தொடர்ந்து ஆப்ரேசன் மகாதேவ் நடவடிக்கைக் குறித்து வீரர்களுடன் அமித்ஷா கலந்துரையாடினார்.